• Sep 20 2024

இந்த ஆண்டு வெளியாகவுள்ள 15 பான் இந்தியத் திரைப்படங்கள் எவை தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் பல திரைப்படங்கள் பான் இந்தியத் திரைப்படங்களாகவே பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் பான் இந்திய படங்கள் என்பது அனைத்து மொழியிலும் வியாபாரம் செய்யக்கூடிய படங்களையே குறிக்கும். அத்தோடு ஒரு மொழியில் மட்டுமல்லாது அனைத்து மொழியிலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய படமாக அமைவது தான் பான் இந்தியத் திரைப்படம் ஆகும்.

அந்த வகையில் இந்த வரும் வெளியாகவுள்ள 15 பான் இந்தியத் திரைப்படங்கள் குறித்து தான் தற்பொழுது பார்க்கப் போகின்றோம்.

1. கப்சா திரைப்படம்

கன்னட சினிமாவிலேயே உயர்ந்த பட்ஜெட்டில் உருவாகும் இத்திரைப்படம் 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் மார்ச் 17ம் தேதி வெளியாகியவுள்ளது. இயக்குநர் சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்களான உப்பேந்திரா சிவராஜ்குமார் கிச்சா சுதீப் ஆகியோர் நாயகன்களாக நடித்திருக்கின்றனர்.இப்படம் சூப்பர் ஹிட்டாகும் என்று நம்பப்படுகின்றது.


2.டசாரா திரைப்படம்

இயக்குநர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படமும் பான் இந்திய அளவில் உருவாகியுள்ளது. அப்படத்தில் நானி கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.65 கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப் பட்டுள்ளது. இந்தப் படமும் வெற்றியடையும் என்று நம்பப்படுகின்றது.


3. பொன்னியின் செல்வன் 2

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத் ஏப்ரல் 28ம் தேதி பான் இந்திய அளவில் வெளியாகவுள்ளது. இபடம் முதல் பாகத்துடன் சேர்த்து 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.


4.ஜவான் திரைப்படம்

இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஷாருகான் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அத்தோடு இப்படத்தில் விஜய் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்திருப்பதாகவும் இப்படமும் பான் இந்தியத்திரைப்படமாகத் தான் வெளியாகவுள்ளது.


5.ஆதிபுருஷ்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படமானது 600 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இப்படமானது ஜுன் மாதம் 16ம் தேதி வெளியாகவுள்ளது கதாநாயகியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார்


6. ஜெயிலர் திரைப்படம்

இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியாகவுள்ளது.175 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் தமன்னா ரம்யா கிருஷ்ணன் மோகன் லால் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.


7. கிங்கொப் கோத்தா

மலையாளத்தில் உருவாகி வரும் இப்படத்தை அபிலாஷ் என்பவர் இயக்குவதோடு துல்கர் சல்மா் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.ஐஸ்வர்யலஷ்மியும் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதோடு இப்படம் 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.


8.சலார் திரைப்படம் 

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் மற்றும் ப்ரீத்திவ் ராஜ் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் செப்டெம்பர் மாதம் 28ம் தேதி வெளியாகவுள்ளது.


9. லியோ திரைப்படம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் த்ரிஷா சஞ்சய் தத் விக்ரம் ஆகியோர்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ள இப்படமானது 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றது.


10.இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் 400  கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகின்றது.இப்படத்தில் காஜல் அகர்வால் விவேக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


11.கேப்டன் மில்லர்

100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரம் இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இவருடன் சந்தீப் கிஷனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இந்தப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.


12. புஷ்பா 2

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியாகவுள்ளது. 250 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இஇப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.


13. சூர்யா 42

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் 170 கோடியில் உருவாகி வருகின்றது.


14.ப்ரோஜெக்ட் கே 

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் நாக அஜ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தில் தீபிகா படுகோன் அமிதா பச்சன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


15. ஆர்சி 15

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படததில் ராம் சரண் திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது எனபதும் குறிப்பிடத்தக்கது.




 

Advertisement

Advertisement