பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் ரிலீசுக்காக தான் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து உள்ளனர்.
இப் படம் அடுத்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது ட்ரெய்லர் எப்போது ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது லைகா நிறுவனம்.
மார்ச் 29ம் தேதி பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் என லைகா புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கிறது.
அத்தோடு இந்த ட்ரெய்லர் 3 நிமிடம் 25 நொடிகள் இருக்கும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவும் அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளது.
Listen News!