சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் பல பிரபல முன்னணி இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் தங்களது துறையை தாண்டி படங்களில் கதாநாயகனாக தங்களை உருமாற்றி வருகிறார்கள். அந்த வகையில் பல முன்னணி இசையமைப்பாளர்களும் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல வெற்றிப்படங்களில் நடித்து வருவதோடு தங்களை திரையுலகில் ஹீரோவாக கலக்கி வருகிறார்கள். இவ்வாறுஇருக்கையில் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மேலும் இவர் இசையமைப்பாளர் என்பதை தாண்டி பின்னணி பாடகர், நடிகர், திரைப்பட ஆசிரியர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை தன்வசம் கொண்டுள்ளார். இந்நிலையில் துவக்கத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை பூர்விகமாக கொண்ட ஆண்டனி அவருக்கு எழு வயதாக இருக்கும்போதே அவரது தந்தை காலமானார்.
அத்தோடு இவரது சகோதரிக்கு நான்கு வயதான நிலையில் அவரது தாயுடன் செய்வதறியா நிலையில் திருநெல்வேலியில் ஒரு அரசாங்க குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியில் தனது கல்வியை முடித்த ஆண்டனி உலக புகழ் பெற்ற பியானோ கலைஞரும் கிதார் கலைஞருமான கிளியோ பாசிடமிருந்து இசை கல்வியை பயின்றார்.
இதனை தொடர்ந்து திரையுலகில் பிரபல இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் உதவியின் மூலம் இசையமைப்பாளராக தன்னை அடையாளபடுத்தி கொண்டார். மேலும் இதன் காரணமாக தனது பெயருக்கு பின்னால் விஜய் அவர்களின் பெயரை இணைத்து விஜய் ஆண்டனி என தன் பெயரை மாற்றி கொண்டார். அதைத் தொடர்ந்து பல படங்களில் இசையமைப்பாளராக பல படங்களில் பல வெற்றி பாடல்களை பாடியும் இசையமைத்தும் உள்ளார்.
இந்நிலையில் இசையை தாண்டி படங்களில் ஹீரோவாக நடிக்க எண்ணி நான் எனும் திரைப்படம் மூலம் முதன்முதலாக தன்னை கதாநாயகனாக தன்னை உருமாற்றி கொண்டார். இவ்வாறு தற்போது பல படங்களில் ஹீரோவாகவும் இசையமைப்பாளராகவும் கலக்கி வருகிறார் .
இந்நிலையில் இவரை பற்றி நமக்கு தெரிந்தளவிற்கு இவரது குடும்பம் பற்றி தெரியாமல் இருந்த நிலையில் சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மனைவியுடன் இருக்கும்படியான புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது.
Listen News!