• Nov 19 2024

பொங்கல் அன்று மட்டுமே விவசாயிகளை நினைக்கக் கூடாது... பொங்கி எழுந்த நடிகர் கார்த்தி... என்ன சொன்னார் தெரியுமா...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. 'பருத்தி வீரன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்த இவர் நடிப்பில் தற்போது வரை ஏராளமான படங்கள் உருவாகி இருக்கின்றன.

நடிகர் சூர்யா கூட ஒரு மேடையில் பேசும் போது என்னைய விட என்னுடைய தம்பி கார்த்திக்கு தான் ரசிகர்கள் அதிகம் அந்த அளவுக்கு அவருக்கு என்று ரசிகர் பட்டாளம் உண்டு. 


நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான இவர் உழவர் விருது கூட்டத்தில்  பேசும் போது கூறியதாவது , நாம் தினம் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்துவிடுகிறோம். நமக்கான உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளைக் கொண்டாட வேண்டும்.


விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கவுரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் 'உழவர் விருதுகள் 2024' விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகை ரோகிணி, நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி ராமையா, நடிகர் பசுபதி மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் கலந்துக் கொண்டார்கள்.


இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி பேசும்போது, "ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால்நடைகளுக்கும்  நன்றி சொல்கிறார்கள். அந்த நாளைத்தான் நாம் பொங்கல் திருநாளாக கொண்டாடுகிறோம். ஆனால், நாம் தினம் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்துவிடுகிறோம். 


பொங்கல் அன்று மட்டுமே விவசாயிகளை நினைக்கக் கூடாது. வரும் காலங்களிலும் இதுப்போல விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் நல் உள்ளங்களை அடையாளப்படுத்தி கவுரவப்படுத்துவதோடு, விவசாயத்திற்கான பங்களிப்பையும் உழவன் ஃபவுண்டேஷன் தொடர்ந்து செய்யும்" என கூறினார்.அவர்களுக்கு என்றென்றுமே நன்றி கூற வேண்டும். என நடிகர் கார்த்தி உரையாற்றியுள்ளார் .

Advertisement

Advertisement