1999 ஆம் ஆண்டு வெளியான ‘மோனிஷா என் மோனலிசா’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை மும்தாஜ். இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் ‘அனிதா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார்.இது தவிர பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் ஒரு பாட்டிற்கு நடனமாடுவதையும் வழக்கமாக்கி கொண்டார்.
பின்பு படவாய்ப்புக் குறைந்ததை அடுத்து கலா மாஸ்டரின் மானாட மயிலாட சீசன் 6-ல் நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
91 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த மும்தாஜ் பின்பு மக்களால் வெளியேற்றப்பட்டார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மும்தாஜ் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளவில்லை. மும்தாஜ் தற்போது எந்த ஒரு படங்களிலும் பணியாற்றவில்லை. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலம் பிக்பாஸிற்குச் சென்றும் மும்தாஜிற்கு படவாய்ப்பு கிடைக்கவில்லையா என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!