• Sep 20 2024

கேக் ஊட்டி கொண்டாடிய அஜித்…எதற்கு தெரியுமா..? ட்ரெண்டாகும் ரீசன்ட் போட்டோஸ் !

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

இவரது நடிப்பில் இறுதியாக வலிமை என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனை எச். வினோத் இயக்கியிருந்தார்.இதனைத் தொடர்ந்து தற்பொழுது தனது 61வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தையும் எச். வினோத் தான் இயக்குவதோடு போனிகபூர் தயாரித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் ஹைதரபாத்தில் சிறிய பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது.

மேலும் பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது.

இப்படத்தில் சார்பேட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கேன் மற்றும் பலர் நடிப்பதாக சொல்லப்பட்டது. அத்தோடு இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தார்.

இப்படத்தில் அஜித், கல்லூரிப் பேராசிரியராக நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. இந்நிலையில், அஜித் AK61 படப்பிடிப்பிற்காக ஐதராபாத் ஹோட்டலில் தங்கியுள்ளார்.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அஜித்திற்கு பிரத்யேகமாக கேக் செய்துள்ளனர். மேலும் இதனை, அஜித் கட் செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு அன்புடன் ஊட்டினார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement