• Sep 20 2024

அஜித் சிம்ரனுடன் இணைந்து என்ன செய்திருக்கார் தெரியுமா..?இதுவரை யாருமே பார்த்திராத வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அமராவதியில் ஆரம்பித்து 'ஆசை, ஆஞ்சநேயா, அட்டகாசம்' என அடுத்தடுத்து பல வெற்றிப்படிகளில் ஏறி இன்று தமிழ் சினிமாவின் சிகரத்தை தொட்டிருப்பவரே நடிகர் அஜித். சிறந்த முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகின்ற இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக இவருக்கு இந்தியாவில் மட்டுமன்றி உலகம் பூராகவும் ரசிகர் கூட்டம் உண்டு.

தல அஜித் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இவர் தற்போது எச். வினோத் என்பவரின் இயக்கத்தில் 'ஏகே 61' என்ற பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஏற்கனவே இந்த கூட்டணியில் வெளிவந்த இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. இந்தநிலையில் அஜித் நடிக்கும் இப்படமும் வெற்றிபெறும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

இப்படத்திற்கு பின்னர் நம்ம தல விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கவிருக்கின்றார். மேலும் இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது இவ்வாறாக படங்களில் தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் இவரின் ஆரம்பகால வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில் இவர் விளம்பரப் படம் ஒன்றில் நடித்திருக்கின்றார்.

இவருடன் இணைந்து நடிகை சிம்ரனும் நடித்திருக்கின்றார். கடந்த பல ஆண்டுகளாக படங்களில் மட்டுமே அஜித்தை எம்மால் காண முடிகிறது. அது தவிர்ந்த எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும், விளம்பர படங்களிலும் அவர் நடிப்பதில்லை.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் நம்ம தல சிம்ரனுடன் இணைந்து நடித்த அந்த விளம்பர படத்தின் வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகளவில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement