• Nov 10 2024

இசைத்துறையில் அனிருத் உச்சம் தொட அடித்தளமிட்ட மூன்று ரூல்ஸ் என்ன தெரியுமா? இதோ அனிருத் பற்றிய சுவாரஷ்யமான விடயங்கள்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

அனிருத் ரவிச்சந்திரன் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் தமிழ், ஹிந்தி  திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் திறி ஆகும். இந்த 3 திரைப்படத்தின் வொய் திஸ் கொலவெறிடி  என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். 


இவர் எதிர்நீச்சல், தங்கமகன், விவேகம், வேலைக்காரன், ரெமோ, வேதாளம், நானும் ரவுடிதான், மாரி, கத்தி, வேலையில்லா பட்டதாரி, வணக்கம் சென்னை என பல படங்களுக்கு இசையமைத்து தற்பாெழுது வெளியாக இருக்கும் தளபதி விஜய்யின் லியோ படத்திற்கும் இசையமைத்துள்ளார்.


அனிருத் இசைத்துறையில் முன்னுக்கு வருவதற்கு மூன்று ரூல்ஸை கடைப் பிடிக்கின்றாராம். அதாவது எல்லோரிடமும் கோபப்பட்டு எரிஞ்சு விழுந்து எந்த பயனும் இல்லை, எல்லோரிடமும்  அன்பாய் இருக்க வேண்டும் இதனால் எந்த கவலையும் எமக்கு வராது என அவர் நினைக்கின்றாராம். அடுத்ததாக ஒரு வெற்றி ஒன்று வரும் போது அதனை ஏற்றுக்கொள்ள முடிகின்றது,  என்றால் முதலில் வாழ்க்கையில் நமக்கு தோல்வி வரும் போது அதை ஏற்றுக்காெள்ள தெரியவேண்டும். அப்படியானால் மட்டுமே வெற்றியை எம்மால் உணர முடியும். எனவும், யாராவது இசை தாெடர்பாக  எதிர்மறையான விடயங்களை சொன்னால் அது உங்களை வளம் படுத்தும் எனில் ஏற்றுக்கொள்ளுங்கள் , இல்லாவிடில் அதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என மூன்று ரூல்ஸை கடைப்பிடிக்கின்றாராம். இதுவே  இசைத்துறையில்  அவர் முன்னுக்கு வர காரணம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement