• Nov 14 2024

விஜய்க்கும் நெப்போலியனுக்கும் இடையில் நடந்த சண்டை... எதனால் வந்தது தெரியுமா..? அதை இப்பவுமா வைச்சு சாதிப்பாங்க..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தன்னுடைய திறமையினாலும், விடாமுயற்சியாலும் இன்று உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்.

தன்னுடைய திரையுலகப் பயணத்தில் இதுவரைக்கும் 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அவர் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.


ரசிகர்கள் மத்தியில் பெரியளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்தப் படமானது பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மேலும் அப்படத்துடன் இணைந்து அஜித்தின் 61 ஆவது திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எது வெற்றிப் படமாக மாறும் என்ற எதிர்பார்ப்புடன் தல, மற்றும் தளபதி ரசிகர்கள் காத்திருக்கின்றார்கள்.


அதுமட்டுமல்லாது இதனைத் தொடர்ந்து விஜய் தனது 67 ஆவது படமான 'தளபதி 67' இலும் இணைய இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் விஜய்யின் சினிமாப் பயணத்தில் வெற்றிப் படமாக அமைந்த ஒரு படம் பற்றிய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.


அதாவது விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'போக்கிரி'. பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தில் விஜய்யுடன் நடிகர் நெப்போலியனும் சிறப்பாக நடித்திருப்பார்.

அப்படத்தின் ஷூட்டிங்கில் இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு சில மனக்கசப்பான விடயங்கள் நடந்திருந்தன. அந்த விஷயத்தினால் நடிகர் நெப்போலியன் விஜய்யிடம் அப்போதில் இருந்து இன்றுவரை பேசுவதில்லை. அதனை அவரே நிறைய பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்திருப்பார்.


அப்படி அவர்கள் இருவருக்குள்ளும் சண்டை வரக் காரணமே கேரவன் (Caravan) தான். அதாவது போக்கிரி ஷூட்டிங்கின் போது நடிகர் நெப்போலியன் அவரின் நண்பர்களுடன் விஜய்யை சந்திக்க அவரின் Caravan-க்கு சென்றுள்ளார். அப்போது Caravan இல் இருந்த விஜய்யை சந்திக்க அவரின் உதவியாளர் ஒருவர் அனுமதிக்க மறுத்துவிட்டாராம். 


இதனால் கடுப்பான நடிகர் நெப்போலியன் அந்த உதவியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய் வெளியே வந்து அவரின் உதவியாளருக்கே ஆதரவாகப் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி விஜய் நெப்போலியனிடமும் கடுமையாக கோபத்தில் பேசிவிட்டாராம். 

இதன் காரணமாக இவர்கள் இருவரும் அன்றிலிருந்து இன்றுவரை பேசிக் கொள்வதில்லை எனத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.   

Advertisement

Advertisement