• Sep 21 2024

விக்ரம் படம் குறித்து தளபதி விஜய் என்ன கூறியுள்ளார் தெரியுமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, பகவத் பாசில் என பல நட்சத்திர பாட்டாளமே நடித்துள்ளதோடு இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிரூத் இசையமைத்துள்ள இப்படமானது வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இத்திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. சமீபத்தில் படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் ரிலீஸ் விழா பிரம்மாண்டமாக நடந்தது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள ட்ரைலர் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது, கோலிவுட் தரப்பில் இருந்து இந்தியளவில் வரவேற்பை பெற்ற படமாக விக்ரம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில் படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் இயக்குநர் லோகேஷ் ப்ரோமோஷனுக்காக பேட்டியளித்த வருகிறார்.

அப்படி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் சார் விக்ரம் படத்தை பார்த்தாரா என்ற கேள்விக்கு, லோகேஷ் " அவர் பார்க்கவில்லை, விக்ரம் படத்திற்காக வெயிட்டிங் டா" என சொன்னதாக லோகேஷ் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement