• Sep 20 2024

தனது பட பூஜைக்கு நடிகர் விஷால் என்ன காஸ்டியூமில் வந்தார் தெரியுமா..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் ஆரம்பத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான சண்டைக் கோழி ,தாமிர பரணி ,திமிரு, பூஜை ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றிருக்கின்றது.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய வீரமே வாகை சூடும் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது புதிய காம்போவாக முக்கிய நடிகருடன் இணைந்து நடிக்கவுள்ளார் நடிகர் விஷால்.

ஆம், இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. மேலும் இப்படத்தில் விஷால் மற்றும் SJ சூர்யா இருவரும் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்று இருக்கிறது, இதில் விஷால் அணிந்து வந்த உடை கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement