• Sep 20 2024

திரும்ப வாங்க அக்கா ப்ளீஸ்- தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்த தர்ஷனா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அர்ஜுன் செய்த சூழ்ச்சியால் தமிழ் தன்னுடைய அம்மாவையே பிரிந்து தனியாக ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று போராடி வருகின்றார்.

அதிலும் தற்பொழுது அர்ஜுனின் சூழ்ச்சி எல்லாம் மீறி தமிழ அசோஷியேசன் தலைவராக மாறிவிட்டார்.இதனால் அர்ஜுன் தமிழ் ஜெயிப்பதற்கு மாமா தான் காரணம் என்று கூறியதால் கோதை தனது கணவர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றார்.


இதனால் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். கோதைக்கு எப்போது உண்மை தெரிய வரும் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க இந்த சீரியலில் வசுந்தரா என்னும் கதாப்பாத்திரத்தில் முதலில் தர்ஷனா நடித்து வந்தார். பின்னர் அவர் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். இதனால் இவர் அடுத்து எந்த சீரியலில் நடிக்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது.

இப்படியான நிலையில் இவர் வெளிநாட்டில் செம ஜாலியாக இருக்கும் வீடியோவை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement