தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் நடிகர் மணிகண்டன். இவர் நடிப்பில் கடந்த மே 12 -ம் தேதி குட் நைட் திரைப்படம் வெளியானது.இதில் மீதா ரகுநாத் ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் என பலரும் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர். தற்போது வெளியான சில நாட்களில் ரூபாய் 1.90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் குட் நைட் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "குட் நைட்' படம் பார்த்தேன். கலகலப்பாக, எமோஷனலாக மற்றும் யதார்த்தமாக உள்ளது. நன்றாக ரசித்து பார்க்கக்கூடிய ஒரு படம். மணிகண்டன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
விநாயக் சந்திரசேகரன் என்பவர் இயக்கியிருக்கும் இப்படமான குறட்டையால் வரும் பிரச்னை என்ற ஒன்லைனை கொண்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த ஒன்லைனை இதற்கு மேல் யாராலும் இவ்வளவு சுவாரசியமாக படமாக்க முடியாது என பாராட்டு மழையை பொழிந்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!