• Sep 20 2024

3டி தொழில்நுட்பத்தில் சரித்திர பின்னணியில் உருவாகும் கங்குவா, சூர்யா என்ன எல்லாம் செய்றார் தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் புதிய பிரம்மாண்ட படைப்பாக சிறுத்தை சிவா இயக்கிவரும் திரைப்படம் தான்  'கங்குவா கோலிவுட் சினிமாவின் பிரமாண்டமான படைப்பாக இப்படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் 'கங்குவா' படம் குறித்து வெளியாகியுள்ள  தகவல்கள் ரசிகர்கள் இடையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இப்படத்தில் கதாநயாகனாக  சூர்யா, திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ் மற்றும் கோவை சரளா உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர்.சரித்திர பின்னணியில் உருவாகிவரும் இப்படத்தை  பத்து மொழிகளில்  இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா.  இப்படம் அடுத்தாண்டு   வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் இப்படத்திற்காக சூர்யா தினமும் இரண்டு மணி நேரம் மேக்கப் போட்டு கொண்டு வருவதாக கூறப்பபடுகிறது. குறிப்பாக பிளாஸ்பேக் காட்சிகளுக்காக அவர் இந்த மேக்கப் போட்டு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கொடைக்கானல் மற்றும் ராஜமுந்திரி காடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இது சூர்யாவின் ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கின்றது.


Advertisement

Advertisement