தமிழ் சினிமாவில் அனைவரின் எதிர்பார்ப்பிலும் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் கண்டிப்பாக இந்தப் படத்தையும் வேற லெவலில் எடுப்பார் என்று நம்பப்படுகின்றது.
அத்தோடு இப்படத்தில் விஜய் உடன் திரிஷா, கௌதம் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவால் பெரிதளவில் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை லலித் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
அத்தோடு காஷ்மீரில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இவ்வாறுஇருக்கையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் கௌதம் மேனன், லியோ படத்தில் நடித்தது குறித்தும், விஜய் குறித்தும் சமீபத்தில் விழா ஒன்றில் பேசியுள்ளார்.
இதில், 'லியோ படத்தின் அப்டேட் எதுவும் தரமுடியாது. என்னுடைய இயக்குனர் லோகேஷ் ரோபோ ஸ்ட்ரிக்ட். தளபதி கூட ஒர்க் பண்ணது நல்ல இருந்தது ' என்று கூறியுள்ளார்.
Listen News!