ஒருவர் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமாயின் அதற்குப் பல வழிகள் உண்டு. அந்தவகையில் சினிமா பிரபலங்களுக்கு இணையாக யூடியூப் பிரபலங்கள் பலரும் தற்போது வளர்ந்து வருகின்றனர். இவ்வாறாக யூடியூப்பில் மில்லியன் கணக்கில் பாலோவர்களை வைத்திருப்பவர்களில் TTF வாசனும் ஒருவர்.
அதாவது இவர் பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவிட்டு யூடியூப்பில் பல இலட்ச ரூபாய்களை சம்பாதித்து வருகிறார். குறிப்பாக இவரை அதிகம் பின் தொடர்வது என்றால் அது 2கே கிட்ஸ் தான். அவர்களை கவரும் விதமாக பைக்கில் அதிவேகமாக செல்வது மற்றும் சாகசம் செய்வது என தொடர்ந்து சில வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் பைக்கில் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார். வாசனுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதாவது 230கிலோ மீற்றர் வேகத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இவர் வீலிங் செய்தமையினால் தான் அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு இவருக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து வாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ் நேற்றைய தினம் அவரைக் கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில் இவரை15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் 3-ஆம் தேதி வரை வாசன் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் சிறைக்கு சென்ற வாசன் தனக்கு கையிலும் இடுப்பிலும் வலி ஏற்பட்டதாக புழல் சிறை ஜெயிலரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கும் நோக்கில் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் முழு பரிசோதனையும் நடந்து முடிந்த பிறகு வாசன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
Listen News!