ருஸோ சகோதரர்கள் இயக்கத்தில் கிறிஸ் இவான்ஸ், ரயன் கோஸ்லிங், தனுஷ், ஆனா டி அர்மாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் தி கிரே மேன் ஹாலிவுட் படம் ஜூலை 22ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த தி கிரே மேன் ப்ரீமியர் நிகழ்ச்சியில் தன் மகன்களுடன் கலந்து கொண்டார் தனுஷ். தி கிரே மேன் படத்தில் நடித்திருக்கும் ஆனா டி அர்மாஸ் தனுஷ் பற்றி தெரிவித்திருப்பதாவது….
தனுஷ் மாதிரி ஒரு பொறுமையான மனிதரை நான் பார்த்ததே இல்லை. அவர் கடின உழைப்பாளி. சண்டை காட்சிகளுக்காக நானும், தனுஷும் ஒரு இடத்தில் பயிற்சி எடுத்தோம். வாரக் கணக்கில் ஒத்திகை பார்த்தோம். மிகவும் பொறுமையானவர்.
தன் வேலையில் மட்டுமே கவனம் இருக்கும், எதிலும் குறை சொல்ல மாட்டார். அவருடன் சேர்ந்து நடித்த அனுபவம் எனக்கு சிறப்பாக அமைந்தது.
அத்தோடு தனுஷ் ஒரு ப்ரொஃபஷனல். அமைதியான நபர் என கிறிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார்.
மார்க் கிரீனி எழுதிய தி கிரே மேன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் இந்த படம். இதையடுத்து தனுஷை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக ருஸோ சகோதரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிற செய்திகள்
- ஹீரோ ஆன பிக் பாஸ் அபினை-வைரலாகும் புகைப்படங்கள்..!
- இந்த விடயத்தை அப்பா தான் செய்யனும் ..யுவனுக்கு கண்டிஷன் போட்ட அமீர்!
- பிரதாப் போத்தன் கொடுத்த செயின் என் கழுத்துல இப்போவும் இருக்கு-பிரபல நடிகர் உருக்கமான கதை…
- பா.ரஞ்சித் பட பூஜையில் விபூதியை தவிர்த்த விக்ரம்-நடந்தது என்ன..?
- ப்ளூ சட்டை மாறனுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!