நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என Almost தென் இந்தியாவை கவர் செய்துவிட்டார். இவர் மலையாளத்தில் 2014ம் ஆண்டு வெளியான 1983 என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்.
தமிழில் யாகாவாராயினும் நா காக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்பு டா, கலகலப்பு 2 என தொடர்ந்து நடித்துவந்தவர் 2022ம் ஆண்டு நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்குப் பிறகும் நடிப்பில் ஆர்வ் காட்டி வருகின்றார்.
இவர் ஒருநாள் கூட தவறாமல் 1 மணி நேரம் வொர்க்கவுட் செய்து விட்டு தான் தூங்க செல்வாராம்.தினமும் தண்ணீர் குடிப்பது நிக்கியின் பழக்கமாம், எப்போதும் வாட்டர் கேனை கையில் வைத்துக்கொண்டு நால் ஒன்றுக்கு 5 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பாராம்.வாக்கிங், சூரிய நமஸ்காரம் செய்ய மறக்க மாட்டாராம். நிக்கி கல்ராணி அதிகம் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்து கொள்வாராம்.
அதுமட்டுமில்லை இரவு 8 மணிக்கு மேல் டின்னர் சாப்பிடும் பழக்கம் அவருக்கு இல்லையாம்.இவ்வாறு தான்னுடைய உடல் எடையை அதிகரிக்காமல் பாதுகாத்து வருகின்றாராம் என்று கூறப்படுகின்றது.
Listen News!