தமிழ் சின்னத்திரையில் சன்டிவி விஜய்டிவி ஷு தமிழ் எனப் பல தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து வருகின்றார். 15 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் இருக்கும் இவர் தற்பொழுது விஜய்டிவியில் தொகுப்பாளராக இருந்த வருகின்றார்.
இது தவிர பிக்பாஸ் சீசன் 4இலும் கலந்து கொண்டு பிரபல்யமானார். மேலும் இவர் தனது மகளுடன் இணைந்து ஷு தமிழில் தொகுத்து வழங்கிய சூப்பர் மாம் நிகழ்ச்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியினால் ஷு தமிழில் இருந்த விலகினார்
இந்நிலையில் தற்போது அர்ச்சனா மீண்டும் ஷு தமிழுக்கு சென்றிருக்கிறார். அவர் தன் மகள் ஷாரா உடன் சேர்ந்து சூப்பர் மாம் சீசன் 3 ஷோவை தொகுத்து வழங்க இருக்கிறார்.ஷாரா தற்போது பள்ளி படித்து வருகிறார் என்றாலும் தற்போதே தொகுப்பாளராகவும் கவனம் ஈர்த்து வருகிறார்.
இந்த நிலையில் ஷாரா குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவருக்கு வருங்காலத்தில் டாக்டர் ஆக வேண்டும்.. என்ஜினீயர் ஆக வேண்டும் என்றெல்லாம் ஆசை இல்லையாம். அவருக்கு Baker ஆக வேண்டும் என்கிற ஆசை இருப்பதாக ஓப்பனாக பேட்டியில் கூறி இருக்கிறார். 'முட்டை பப்ஸ் விப்பாங்களே அந்த வேலை தானே' என அர்ச்சனா ஷாராவை கலாய்த்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!