உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3ம் திகதி வெளிவந்த திரைப்படம் விக்ரம். பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த படம் இன்று வரை மாஸ் ஹிட் கொடுத்து வருகின்றது.
அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், போன்ற முன்னணி நட்சத்திரங்களும் கௌரவ வேடத்தில் நடிகர் சூர்யாவும் நடித்திருந்தார்.
மேலும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக பல பிரபலங்களையும் கமல்ஹாசன் சந்தித்த வருகின்றார். அத்தோடு விக்ரம் பட இயக்குநரான லோகேஷிற்கு கமல் புதிய கார் ஒன்றினை வழங்கியிருந்தார். அதே போல உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு பைக்கை வழங்கியிருந்தார்.
இது தவிர நடிகர் சூர்யாவிற்கு பெறுமதி வாய்ந்த தனது ரோலக்ஸ் மணிக்கூட்டையும் வழங்கியிருந்தார். இது குறித்த புகைப்படங்களும் வைரலாகின. இந்த நிலையில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அனிரூத்திடம் கமல் சேர் உங்களுக்கு என்ன தந்தார் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக அவர் கமல் சேர் விக்ரம் படத்தை எனக்குத் தந்துள்ளார் என்று சாதுரியமாகப் பதில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நடிகர் மணிவண்ணனின் 9 ஆண்டு நினைவு தினம்-அனுதாபங்களைத் தெரிவித்து வரும் ரசிகர்கள்
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் மீண்டும் வெடித்த புதிய பிரச்சினை-விசாரணைகள் விரைவில் ஆரம்பம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!