• Sep 20 2024

விருமன் திரைப்பட நடிகை அதிதியின் செல்லப் பெயர் என்ன தெரியுமா?- அடடே ஷங்கர் இப்படித் தான் இவரை அழைப்பாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

டைரக்டர் முத்தையா இயக்கிய விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் அதிதி. இவர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் என்பதும் யொவரும் அறிந்ததே. தனது முதல் படத்திலேயே முன்னணி நடிகரான கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணியில் தோன்றி ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்டதோடு பட ரிலீஸிற்கு முன்பே பிரபல்யமாகி விட்டார். பட ரிலீஸிற்கு பின்னர் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.


இந்த சமயத்தில் அதிதியின் அப்பாவும், டைரக்டருமான ஷங்கர் ஆகஸ்ட் 17 ம் தேதி தனது 59வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக அதிதி தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து தான் தற்போது அதிதி பற்றியே அனைவரையும் பேச வைத்துள்ளது.

அதிதி அதில் கூறியதாவது என் வாழ்க்கையில் சினிமாவை கொண்டு வந்தவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பான் இந்தியா படங்களின் முன்னோடி, நீங்கள் திரையில் கற்பனையை உயிர்ப்பிக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி ஷங்கர் சார். ஆனால் என் அப்பாவுக்கு முதலில் எப்போதும் நன்றி. லவ் யூ- சின்னு என குறிப்பிட்டுள்ளார்.

இந்த அழகான வாழ்த்தில், அப்பா மீது தனக்கு இருக்கும் அன்பு மற்றும் மரியாதையை மட்டுமல்ல, வீட்டில் தனது செல்ல பெயர் சின்னு என்பதையும் வெளிப்படுத்தி உள்ளார். அதிதி பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது செம சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அதிதி தனது அடுத்த படமான மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement