• Sep 20 2024

கமல் எனக்கு என்ன எல்லாம் செய்தார் தெரியுமா... மறைந்த நடிகர் 'என் உயிர் தோழன்' பாபுவின் உருக்கமான பேச்சு..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

அதாவது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'என் உயிர் தோழன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் பாபு.இப்படத்தில் அறிமுகமானதைத் தொடர்ந்து ‘என் உயிர் தோழன்’ பாபு என்றே ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். 


மேலும் 'பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு, பெரும்புள்ளி, தாயம்மா, மனசார வாழ்த்துங்களேன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கின்றார். இந்நிலையில் 'மனசார வாழ்த்துங்களேன்' என்ற படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது மாடியில் இருந்து குதிக்க வேண்டிய காட்சியில் டூப் போட்டுக் கொள்ளாமல் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக கீழே குதித்து இருக்கிறார். 


அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி தவறுதலாக வேறு இடத்தில் நடிகர் பாபு விழுந்ததில் அவருடைய முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்புகள் உடைந்து நொறுங்கியது. இதனையடுத்து இவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்தும் அது பலனளிக்கவில்லை. இவருடைய உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் இவருக்கு தொடர் சிகிச்சைகள் அளித்தபோதும் சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் பாபு காலமானார். 

இந்நிலையில் இவர் நடிகர் கமல்ஹாசன் குறித்து பேசிய வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது. அந்தவகையில் அதில் அவர் கூறுகையில் "தான் சிகிச்சையில் இருந்த நேரத்தில் எனக்கு உதவியது கமல்ஹாசன் தான், அத்தோடு படுக்கையிலேயே முடங்கிவிட்ட போதும் அவர் எனக்கு உதவினார், அத்தோடு எனக்கு நல்ல நண்பராகவும் கமல் இருந்தார்" எனக் கூறியுள்ளார்.


மேலும் "கமலின் மருதநாயகம் படத்தில் கால் இல்லாமல் வரும் ஜமீன்தாரின் மகனாக நடிக்க இருந்தேன், அப்பிடி ஒரு வாய்ப்பு கொடுத்ததும் கமல் தான், எல்லா விஷயத்திலும் கமல்ஹாசன் என்கூடவே இருந்தார்" எனவும் கூறியுள்ளார்.

அத்தோடு மருதநாயகம் படமானது பட்ஜெட் பிரச்சினை காரணமாக முடங்கி இருந்தாலும், என் உயிர் தோழன் பாபுவும் இந்தப் படத்தில் நடித்தது பலருக்கும் ஷாக் ஆகி உள்ளது. அதுமட்டுமல்லாது நடிகர் பாபுவிற்கு கமல்ஹாசன் செய்த உதவியைப் பார்த்தும் பலரும் வியந்துள்ளனர்.

Advertisement

Advertisement