திரைப்படத் தயாரிப்பாளராக பலராலும் அறிப்பட்டவர் தான் ரவீந்தர். இவர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை போன வருடம் திருமணம் செய்து கொண்டார்.
சிலர் வாழ்த்து கூறி இருந்தாலும் பலர் எதிர்மறை விமர்சனக்கருத்தையே முன்வைத்தார்கள். ஆனாலும் இத்தம்பதி அவ்வாறாக விமர்சனங்களுக்கு செவி சாய்க்காது தமது வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு சந்தோஷமாக வாழ்க்கையை நடாத்தி வந்த இவர்களது வாழ்வில் புயல் வீசியது போன்று ஒரு சம்பவம் நிகழந்துள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் தற்போது ரவீந்தர் நிபந்தனைகளுடன் ஒரு மாதம் கழித்து ஜாமீன் வழங்கபட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கணவன் வந்த சந்தோஷத்தை மகாலட்சுமி ஒரு புகைப்படமோ அல்லது ஒரு பதிவோ போட்டுத் தெரியப்படுத்தாமல் தற்போது புடவை விளம்பரத்தை ஆரம்பித்துவிட்டதாகவும் அதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், அது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் அதிகம் பகிர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Listen News!