• Sep 20 2024

அஜித்தின் உல்லாசம் படத்தில் நடித்த மகேஷ்வரி இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?- வெளியாகிய லேட்டஸ்ட் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான உல்லாசம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் மகேஷ்வரி.இப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் மற்றும் அஜித் ஆகியோர் நடித்திருந்தனர்.இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் என்பதும் முக்கியமாகும்.

அத்தோடு இவர் க்ரண்ட்டிவீர் என்ற படத்தின் மூலம்  தான் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் கருத்தம்மா என்ற படத்தில் நடித்த மகேஷ்வரிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.


இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தமிழில்  இவர் நடித்த பாஞ்சாலங்குறிச்சி, நாம் இருவர் நமக்கு இருவர், உல்லாசம், நேசம், ரத்னா, என்னுயிர் நீதானே, சுயம்வரம் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

பட வாய்ப்புகள் குறைய ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்ட மகேஷ்வரி பேஷன் டிசைனில் அதிக ஆர்வம் இருந்ததால் அந்த தொழிலில் தான் தற்போது ஈடுபட்டு வருகிறார்.இவரது இந்த தொழிலுக்கு மிகவும் உருதுணையாக இருந்தது நடிகை ஸ்ரீதேவி தானாம், இதனை பல பேட்டிகளில் அவரே கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement