• Nov 19 2024

நடிகை மஞ்சிமா மோகனின் தலைமுடி இவ்வளவு அடர்த்தியாக இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் நுழைந்த மஞ்சிமா மோகன், பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் 2016-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.

இவர் முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த இவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன.


 இவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்தியுடன் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கினர். பின்னர் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு கடுமையாக வேர்க்கவுட் செய்து உடல் எடையைக் குறைத்துள்ளார்.இந்த நிலையில் இவரின் தலைமுடியின் ரகசியம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவதுமஞ்சிமா தலைக்கு பயன்படுத்தும் முக்கிய பொருள் தேங்காய் எண்ணெய், முழுக்க முழுக்க சுத்தமான தேங்காய் எண்ணெய் மட்டும் தான் யூஸ் செய்வாராம். 

நெல்லிக்காய் முடிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவுமாம், தனது உணவில் அடிக்கடி சேர்த்துகொள்வாராம்.தலைக்கு நிறைய எண்ணெய் வைத்து மசாஜ் செய்து குளிக்கும் வழக்கம் மஞ்சிமாவிடம் உள்ளதாம். நிறைய கெமிக்கல் பொருட்களை முடிக்கு பயன்படுத்த மாட்டாராம், ஹேர் மாஸ்க், ஹேர் பேக் கூட முழுக்க முழுக்க ஹெர்பல் தானாம். இதனால் தான் இவருடைய தலைமுடி அடர்த்தியாக உள்ளதாக கூறப்படுகின்றது.



Advertisement

Advertisement