• Sep 21 2024

அட இது நம்ம அப்பாஸா…வீட்டில் என்ன செய்கிறார் தெரியுமா..வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் கதிர் இயக்கத்தில் வெளிவந்த காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். இவர்90S காலத்தில் முன்னணி நட்சத்திரமாக சினிமாவில் கலக்கி வந்தார்

தொடர்ந்து, காதல் வைரஸ், இனி எல்லாம் சுகமே, படையப்பா, மலபார் போலீஸ் விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற திரைப்படங்களில் நல்ல விமர்சனங்களையும்,நல்ல வரவேற்பையும் பெற்றார்.

இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து திரை உலகில் கலக்கி வந்தார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்தார்.

இவ்வாறு சினிமாவில் மிரட்டலான நடிப்பில் அசத்தி வந்தார் நடிகர் அப்பாஸ்.பின்னர் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்து நியூஸ்லாந்தில் செட்டில் ஆகி விட்டார்.பின்பு விளம்பரப்படங்கள்,டிவி சீரியல் என நடித்தாலும் பின்பு சினிமாவை விட்டு முழுமையாக சென்று விட்டார்.

இந்த நிலையில் நடிகர் அப்பாஸின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் அப்பாஸ் எப்படி தோசை சுடுவது என்ற ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட நம்ம அப்பாஸா… ரொம்ப அழகாய் இருக்கிறீர்கள் என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இதோ அந்த புகைப்படங்கள்...

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement