• Sep 20 2024

நடிக்க வருவதற்கு முன் நடிகை நஸ்ரியா என்ன தொழில் செய்துள்ளார் தெரியுமா-வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நேரம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை நஸ்ரியா. இப்படத்தினைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.



இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானார்.தொடர்ந்த படவாய்ப்புக்கள் குவியத் தொடங்கினாலும் திடீரென திருமண பந்தத்தில் இணைந்தார்.



அதன்படி மலையாள நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகினார்.இதனை அடுத்து தற்பொழுது மீண்டும் அடடே சுந்தரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

 

இந்நிலையில் நஸ்ரியா சிறுவயதிலே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமானாகியுள்ளார்

அப்படி அவர் சிறுவயதில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ தான் ரசிகர்களிடையே பரவி வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள் 




Advertisement

Advertisement