• Sep 20 2024

'விக்ரம்’ படம் பார்த்த ரஜினி என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். தீவிர கமலின் ரசிகரான லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக அவருடன் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.

விக்ரம் திரைப்படம் எதிர்ப்பார்த்தை விட பயங்கரமாக இருந்தது என்றே கூறலாம். இதனால் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களும் விக்ரம் படத்தை கொண்டாடி வருகின்றார்கள

இந்நிலையில் இந்த படத்தை தமிழ் திரையில் உள்ள பல பிரபலங்கள் பார்த்து கமல்ஹாசன் உள்பட படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் விக்ரம் திரைப்படத்தை நேற்று பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. படம் பார்த்தவுடன் ரஜினிகாந்த் படம் சூப்பராக உள்ளது என கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர்களிடம் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தகவல் கசிந்துள்ளது.

விக்ரம் படம் ரிலீஸுக்கு முன்னரே இந்தப் படம் வெற்றி பெற கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவருக்கும் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement