தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான நடிராக வலம் வந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார். இவரது இறப்பு திரையுலகில் பேரதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது.அத்தோடு இவரது உடல் புதைக்கப்பட்டிருக்கும் தேமுதிக அலுவலகத்திற்குச் சென்று திரையுலகப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் மரணமடைந்துவிட்டார் என்கிற செய்தியை முதலில் திரையுலகில் யாருமே நம்பவில்லை. அதில் ரஜினியும் ஒருவர். அப்போது அவர் கன்னியாகுமாரியில் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்தார். விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்த நடிகர் மீசை ராஜேந்திரனிடம் பேசிய பின்னர்தான் அவருக்கு அது உண்மை என தெரியவந்துள்ளது.
இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய ராஜேந்திரன் ‘கேப்டன் இறந்த செய்தி வெளியாகி 5 நிமிங்களில் ரஜினி சாரின் பி.ஏ. என்னை தொடர்பு கொண்டு அந்த செய்தியை உறுதிப்படுத்திக்கொண்டார். சிறிது நேரத்தில் ரஜினியே என்னிடம் பேசினார். அவர் குரல் கேட்டவுடனேயே நான் அழுதுவிட்டேன்’.
எனக்கு ஆறுதல் சொன்ன ரஜினி சார் ‘வருத்தப்படாதீர்கள்.. எப்போது அடக்கம் செய்கிறார்கள்?’ என கேட்டார். நான் ‘நாளை’ என சொன்னதும் ‘இப்போது நான் கன்னியாகுமரியில் இருக்கிறேன். நாளை வருகிறேன்’ என சொன்னார். சொன்னபடியே நேரில் வந்து அவர் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினார்’ என மீசை ராஜேந்திரன் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!