விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகியிருக்கிறது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் பான் இந்தியா படமாக வெளியானது. படத்தின் ரிலீஸை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
படத்தின் பெயர் போட ஆரம்பித்ததிலிருந்து ரசிகர்கள் உற்சாகத்தில் கத்திக்கொண்டும் விசிலடித்துக்கொண்டும் படத்தை ரசிக்க ஆரம்பித்தனர்.படத்தை பார்த்த ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் மேக்கிங்கில் அதகளம் செய்துவிட்டார். கொடுத்த பணத்துக்கு படம் ஒர்த்துதான் என்று சிலாகிக்கின்றனர்.
அதிலும் மாஸ்டர் படத்தில் விஜய்யை எப்படி வேறு மாதிரி நடிக்க வைத்திருந்தாரோ அதேபோல் லியோவிலும் விஜய்யை வேறு மாதிரி நடிக்க வைத்திருக்கிறார். விஜய்யின் நடிப்பை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கிறது எனவும் கூறினார்கள்.
தற்போது லியோ படத்தை பற்றிதான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த வசூல் சாதனையை தொடங்கி இருக்கிறது .முதல் நாளில் மட்டும் 148.5 கோடி ருபாய் வசூலித்து பெரிய சாதனை படைத்து இருக்கிறது .இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி லியோ படத்தை பார்த்து இருக்கிறார். அவர் லியோ பட தயாரிப்பாளருக்கு போன் செய்து வாழ்த்தி இருக்கிறார்.
"ப்ரொடக்ஷன் வேல்யூ அதிகம் இருக்கிறது' என கூறி பாராட்டினாராம் ரஜினி. இது எனக்கு கிடைத்த பெருமை என லலித் குமார் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!