• Sep 20 2024

ஆத்தாடி...'ஜெயிலர்' ஸ்பெஷல் ஷோ பார்த்த ரஜினி ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஜெயிலரில் இருந்து வெளியான பாடல்கள், ட்ரெய்லர் அனைத்துமே படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

இந்நிலையில், ஜெயிலர் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்த வீடியோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. ரஜினிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் காட்சியை ஜெயிலர் படக்குழுவினருடன் பார்த்து ரசித்துள்ளார்.

வெள்ளை வேஷ்டி, கறுப்பு டீஷர்ட்டில் ரொம்பவே சிம்பிளாக வருகை தந்த ரஜினி, படம் பார்த்த பின்னர் நெல்சன் உட்பட ஜெயிலர் படக்குழுவினருடன் கை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement