• Sep 20 2024

சிவாவுடன் இணையும் அதிதி..என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா..? வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியிருப்பவர்  அதிதி ஷங்கர்.இவர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அறிமுக படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளார் அதிதி

விருமன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அதிதி



இவ்வாறு இருக்கையில் டாக்டர்', 'டான்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் மாவீரன். இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர்.

இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.  எனினும் இந்த படத்தில் நடிகை அதிதி சங்கர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.



அத்தோடு இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு சென்னை சுற்று வட்டாரப்பகுதிகளில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement