• Sep 20 2024

பிக்பாஸிலிருந்து வெளியேறிய ஷெரினா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 இல் ஒவ்வொரு வாரமுமு் வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் தீவிரமாக போட்டியாளர்கள் தமக்கிடையே அதிக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகையில் இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் போட்டியாளர்கள் தமக்குரிய கதாப்பாத்திரங்களாகவே மாறி நடித்து வருகின்றனர்.குறிப்பாக டாஸ்க் தொடங்கிய அன்றே அசீம் விக்ரமனுடன் சண்டைக்குச் சென்று விட்டார்.


இது தவிர விக்ரமனின் கருத்துக்கள் பிழையாக உள்ளது என்னை இளவரசி பதவியிலிருந்து நீக்குங்கள் என்று ஜனனியும் பிக்பாஸிடம் கோரிக்கை வைத்திருந்தார். இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.

அந்த வகையில் பிக்பாஸிலில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர் தான் ஷெரினா. இவர் 4வது போட்டியாளராக வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இவர் பிரபல நகைக் கடைக்குச் சென்றுள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்


Advertisement

Advertisement