• Sep 20 2024

திருமணம் எப்போது என்ற கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் என்ன பதிலளித்துள்ளார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி பிரபல்யமானவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இவ்வாறு இருக்கையில் ஸ்ருதி ஹாசனும், டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவும் காதலித்து வருகிறார்கள். ஸ்ருதி வீட்டில் தான் சாந்தனு தங்கியிருக்கிறார். தன் காதலருடன் சேர்ந்து புகைப்படம், வீடியோக்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார் ஸ்ருதி.

இந்நிலையில் சாந்தனு, திருமணம் பற்றி ஸ்ருதி தெரிவித்ததாவது…

கலை, இசை, சினிமா மீதான ஆர்வம் தான் எனக்கும், சாந்தனுவுக்கும் இடையே நட்பு ஏற்பட காரணம். அவர் மிகவும் அன்பானவர், திறமையானவர். நான் இதற்கு முன்பு நடிகர்களை காதலித்திருக்கிறேன். மேலும் அது ரொம்ப மோசம். சில நடிகைகளுக்கு அது ஒர்க்அவுட் ஆகலாம். ஆனால் என்னை பொறுத்தவரை நான் முதலில் ஒரு இசை கலைஞர். எனக்கு பிடித்த விஷயங்களை பிடித்த நபரை சினிமா துறையில் நான் இதுவரை சந்தித்தது இல்லை.

மேலும் நான் காதலித்த நடிகர் என்னை புரிந்துகொள்ளவில்லை. திரைத்துறையை சேராதவரை காதலித்தபோது தான் என்னை போன்றே ஆட்கள் இருப்பதை கண்டுபிடித்தேன் என்றார்.

திருமணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? விரைவில் திருமணம் செய்யும் திட்டம் இருக்கிறதா என்று ஸ்ருதியிடம் கேட்டதற்கு, அவர் தெரிவித்ததாவது…

திருமணத்தை பற்றி நினைத்தாலே பதட்டமாக இருக்கின்றது. அவசரப்பட்டு திருமணம் செய்ய மாட்டேன் என்று குறிப்பிட்டார்.

https://www.youtube.com/embed/NrGhWG5Emwc



பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Post Settings

Advertisement

Advertisement