• Sep 20 2024

திடீரென வந்த ஆபாச கமன்ட் -கடும் கோபத்தில் சுனிதா என்ன செய்துள்ளார் தெரியுமா..? வைரலாகும் பதிவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சியின் வெற்றியே இதன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள்தான்.குறிப்பாக கோமாளிகள் செய்யும் சேட்டைகள் மற்றும் அவர்களது வித்தியாசமான கெட்டப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

இந்த நிகழ்ச்சியின் கோமாளியாக வந்து அனைவரையும் கவர்ந்து வரபுவர் தான் சுனிதா.இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.அசாமை சேர்ந்த சுனிதா விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம்தான் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து சிங்கிள் பொண்ணுங்க, காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளிலும் இவர் சிறப்பாக பங்கேற்றுள்ளார். சில சீரியல்களிலும் நடித்துள்ள இவர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக நடித்திருந்தார். ராகவா லாரன்சின் காஞ்சனா 3 படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இவருக்கு சரியாக தமிழ் பேச வராது என்றாலும் இவர் கொஞ்சி கொஞ்சி பேசும் அழகை ரசிகர்கள் அதிகமாக ரசித்து வருகின்றனர். தனியாக யூடியூப் சேனலையும் நடத்திவரும் இவர் தன்னுடைய வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் பகிர்வுகளை அதிகமாக வெளியிட்டு வருகிறார்.

சுனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் கேள்வி கேட்டு பதில் சொல்வது. அப்போது அப்போது லைவ் வருவது ரசிகர்களுடன் உரையாடுவது என்பதை வழக்கமாக செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல அவர் உரையாடலை தொடர்ந்தபோது ஒரு நபர் அவரிடம் பிகினி ஓபன் செய்து காட்டுங்கள் என தவறாக கேட்டுள்ளார்.


இதற்கெல்லாம் மனஉடைந்து போகாதவர் சுனிதா என்று அந்த ஷோ பார்க்கும் அனைவருக்கும் தெரியும். சுனிதா இனி இந்த செயலை அந்த நபர் வேறு யாரிடமும் செய்யக்கூடாது என்ற நோக்கத்துடன் அந்த நபரின் ஐடியுடன் அவர் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி போட்டு பதிலடி கொடுத்துள்ளார். இதைப் பார்த்த சுனிதாவின் ரசிகர்கள் கோவமாக பொங்கி எழுந்தனர்

Advertisement

Advertisement