• Sep 21 2024

பரத்தின் பிறந்தநாளில் சர்ப்பிரைஸாக படக்குழுவினர் செய்த விஷயம்…என்ன தெரியுமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பரத். இவரது நடிப்பினாலும், நடனத்தினாலும் பலராலும் அறியப்பட்டவர். அதுமட்டுமன்றி 'பாய்ஸ்', 'செல்லமே', 'காதல்', 'பழனி', 'ஆறுமுகம்', 'சேவல்', 'கோ' என நம் நெஞ்சை விட்டு அகலாத பல படங்களிலும் நடித்திருக்கின்றார். இவர் தமிழில் மட்டுமன்றி மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் இவர் தற்போது அறிமுக இயக்குநரான சக்திவேல் என்பவரின் இயக்கத்தில் அமைந்த 'மிரள்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை வாணிபோஜன் நடித்துள்ளார். அத்தோடு இவர்களுடன் இணைந்து கே.எஸ்.ரவிக்குமார், காவ்யா, ராஜ்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அத்தோடு இப்படத்தில் உள்ள இன்னொரு சுவாரஸியமான விடயம் என்னவென்றால் பாடல்களே இல்லாமல் இப்படம் உருவாகியுள்ளது. அதுமட்டுமன்றி படத்தின் முழு கதையும் ஒரு காற்றாலை பண்ணையின் பின்னணியில் அமையப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் பரத்தின் பிறந்தநாளான நேற்றைய தினம் படக்குழுவினர் கேக் வெட்டி வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர். அதுமட்டுமல்லாது ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கும் வகையில் இப்படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்தப் போஸ்டரானது கேக்கில் இடம்பெற்றுள்ளது. தற்போது இப்போஸ்டர் ஆனது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement