• Sep 20 2024

ஜி.வி பிரகாஷுடன் சண்டை வந்தால் மறைந்த நா.முத்துக்குமார் என்ன செய்வார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தன்னுடைய இளம் வயதிலேயே இயக்குநர் அக வேண்டும் என்ற கனவில் பாலு மகேந்திராவிடம் துணை இயக்குநராக இணைந்தார் முத்துக்குமார். அவரிடம் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு பின்னர் பாடல்கள் எழுத ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் சினிமா பாடல்கள் மட்டுமன்றி, சீரியல் டைட்டில் பாடல்கள், நாவல்கள், இரு படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார்.ஒரு சில பாடல்கள் எழுதியிருந்தாலும், முதன் முதலில் அவரை அடையாளம் காட்டியது பிரசாந்த் நடித்திருந்த சலாம் குலாமு பாடல்தான்.

அதன் பின் தாவணியில் என்னை மயக்குறியே, தேரடி வீதியில், கொடுவா மீச அருவா பார்வ, திருநெல்வேலி அல்வாடா, 7ஜி ரெயின்போ காலனி பாடல்கள் என்று அவர் காட்டில் இசை மழைதான் பொழிந்தது. இறுதியாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் சர்வம் தாள மயம் படத்தில் ஒரு பாடலி எழுதியிருந்தார்.

பாடலாசிரியராக மட்டுமல்லாமல் கிரீடம் படம் மூலம் வசனகர்த்தாவாகவும் தனது பணியை சிறப்பாக செய்தார். அதைத் தவிர்த்து ஜெய்ப்பது நிஜம், என் தோழி என் காதலி என் மனைவி, வைதேகி உள்ளிட்ட சீரியல்களுக்கு டைட்டில் பாடல்களையும் எழுதியுள்ளார். பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, கிராமன் நகரம் மாநகரம் ஆகிய கவிதை தொகுப்புகளையும் இயற்றியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிமுகமான வெயில் திரைப்படத்திலிருந்தே அவருக்காக பல பாடல்களை எழுதியுள்ளார். ஜி.வி 375 பாடல்களுக்கு இசையமைத்திருந்தபோது அதில் 250 பாடல்களை முத்துக்குமார்தான் எழுதியிருந்தாராம்.

இருவரும் பல முறை சண்டை போட்டுக் கொண்டதாகவும், பின்னர் இரவு ஃபோன் செய்து இரண்டு மணி நேரம் தனக்கு அட்வைஸ் செய்து ஓரு அண்ணன் போல் தன்னுடன் இருந்ததாகவும், முத்துக்குமார் இறந்த பின்னும் அவரது அலைபேசி எண்ணை அழிக்க மனமில்லாமல் இன்றும் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் ஜி.வி அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement