• Nov 10 2024

வேணும் எண்டா என்னை ரெண்டு அடி அடியுங்க கேப்டன்.. மன்சூர் அலி கானின் இந்த டயலொக் எதனால் வந்தது தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் திறமை வாய்ந்த ஒரு வில்லன் நடிகராகத் திகழ்ந்து வருபவர் மன்சூர் அலி கான். இவர் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், இசையமைப்பாளர், நடன கலைஞர் என்ற பன்முகங்களைக் கொண்ட ஒரு கலைஞராகவும் விளங்கி வருகின்றார்.

பல படங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக 'தி லெஜன்ட்' என்ற படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாது தற்போது 'வாஸ்கோடகாமா, மெடிக்கல் மிராக்கிள்' போன்ற படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.


இந்நிலையில் தான் நடிகர் விஜயகாந்த்திற்கும் மன்சூர் அலி கானிற்கும் இடையே நடந்த சுவாரசியமான தகவல் ஒன்றை நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கின்றார். 

அந்தவகையில் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் பாடல்களில் பின்னால் ஆடும் சாதாரண ஒரு நடன கலைஞராக தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் மன்சூர் அலி கான். பின்னர் இவர் ஹிந்தி நடிகர் அனுப்பம் கேர் நடத்தி வந்த நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்று அதன் வாயிலாக நடிகரானார். 

அத்தோடு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற 'கேப்டன் பிரபாகரன்' என்ற படத்தில்தான் முக்கிய வில்லனாக அறிமுகமானார்.

அப்படிப்பட்ட மன்சூர் அலி கான் விஜயகாந்த் மீது யாருமே கொடுக்க முடியாத அளவிற்கு மிகுந்த மரியாதை கொண்டவர். அதற்கான காரணம் என்னவெனில் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் அவர் மன்சூர் அலி கானை அறிமுகம் செய்திருந்தார்.


இந்நிலையில் ஒருமுறை நடிகர் சங்கம் தேர்தல் பிரமாண்டமாக நடந்து கொண்டிருந்தபோது பிரச்சார நேரத்தை தாண்டி தேர்தல் நேரத்திலும் உள்ளே இருந்து எனக்கு வாக்களியுங்கள் என்று அனைவரிடமும் கூறியிருக்கிறார் மன்சூர் அலி கான். அதனை கண்ட சரத்குமார் உடனே மன்சூர் அலி கானை தடுக்க, அவரது பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து அதையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தாராம். 

இதனைத் தொடர்ந்து உடனே விஜயகாந்த்திற்கு கால் செய்து விஷயத்தை கூறியிருக்கிறார் சரத்குமார். அடுத்த இருபதாவது நிமிடத்தில் அங்கு வந்து நடிகர் விஜயகாந்த்,"ஏய் மன்சூர்... இங்க மாதிரிலாம் பண்ண கூடாது என்னய்யா பண்ற" என்று தனக்கே உரிய அதட்டலான தொணியில் அவரைப் பார்த்துக் கேட்டிருக்கின்றார்.


அதற்கு "கேப்டன், ஒன்னுல்ல... அவங்க ஏதோ சும்மா சொல்றாங்க. வேணும்னா என்ன ரெண்டு அடி அடிங்க... நீங்க என்ன கேக்கலாம் ஆனா மத்தவங்க சொன்னா கேட்க மாட்டேன்" என்பதுபோல் மன்சூர் அலி கானும் தனக்கே உரிய பாணியில் பதிலளித்தாராம். இவர்கள் இருவருக்குமிடையில் நடந்த இந்த சுவாரஸ்யமான தகவலை மீசை ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement