• Nov 19 2024

லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப் போகின்றார் தெரியுமா?- உண்மையை உளறிய பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் -லோகேஷ் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியுள்ள லியோ படம் இன்னும் ஒரு மாதத்தில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்காக உலகளவில் ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களையும் அவர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

 இந்தப் படம் அக்டோபர் 19ந் தேதி வெளியாக இருக்கிறது.  இப்படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இதனை அடுத்து விஜய் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் சினேகா, பிரியங்கா அருள் மோகன் நாயகிகளாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் விஜய் தன்னுடைய அப்பாவை நேரில் சென்று சந்தித்த புகைப்படமும் இரண்டு நாட்களுக்கு முதல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.கடந்த சில ஆண்டுகளாக விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில் இருவரின் சந்திப்பு பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிரபல பத்திரிகையாளர் கூறியதாவது தனது மகனை ஆரத்தழுவ வேண்டும் என்று நினைத்து நேரு ஸ்டேடியத்தில் காத்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகரை, மற்றவர்களைப் போல பத்தோட பதினென்னா விஜய் கடந்து போனதை பார்க்கும் போது நமக்கே மனசு வலித்தது. ஆனால், இப்போது எஸ்.ஏ.சந்திர சேகர் எதற்காக ஏங்கினாரோ அது நடந்துவிட்டது.  இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு அதற்காக ஆஞ்சியோ செய்யக்கூடிய அளவிற்கு அவரின் உடல்நிலை மோசமாகி இருக்கிறது என்றால், அதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இனிமேல் இந்த பிரச்சனை வராது இனி இருவரும் சேர்ந்தே பயணம் செய்வார்கள்.


லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு முன்பாக ப்ரீ ரிலீஸ் விழா கோலாலம்பூரில் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால், விஜய் கலந்து கொள்வது சந்தேகம் என்பதால், அந்த விழா நடைபெறுவது சந்தேகம் தான். சென்னையில் நடைபெறும் இசைவெளியீட்டு விழாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடித்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

 இதில் என்ன பேசப்போகிறார் என்பதை தெரிந்து ரசிகர்கள் மட்டுமில்லாமல், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆர்வமுடன் உள்ளனர். திட்டமிட்டபடி நேரு ஸ்டேடியத்தில் தான் நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தல் வரும் இந்த நேரத்தில் அது குறித்த தான் பேச வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement