• Sep 20 2024

"வாரிசு படத்தின் ரிசல்ட் குறித்து விஜய் ரியாக்ஷன் என்ன தெரியுமா? தில்ராஜூ அளித்த பதில் இது தான்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த பொங்கலுக்கு  (11.01.2023)  திரையரங்குகளில் வெளியானது.தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார். 

இந்த படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயும், 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூலித்தது என அறிவிக்கப்பட்டது. மேலும் வாரிசு படம் 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என்றும் தற்போது வரை வாரிசு படம் 300+ கோடி ரூபாயை வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படம் பிரபல அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியானது.‌ இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கலந்து கொண்டார். அப்போது அவரிடம், "வாரிசு படத்தின் ரிசல்ட் குறித்து விஜய் ரியாக்ஷன் என்ன? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் ட்விட்டரில் அளித்த தில்ராஜூ, "வாரிசு படத்தின் ரிசல்ட் விஜய்க்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது மற்றும் பொங்கல் வெற்றியாளர்" என தில் ராஜூ கூறியுள்ளார்.


Advertisement

Advertisement