தேனி மாவட்டம் வருஷநாடு பகுதி பசுமலையை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் மாரிமுத்து. திரைத்துறையில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த நடிகர் மாரிமுத்து, கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார்.
பின்னர் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ராஜ்கிரண், மணிரத்னம், வஸந்த், சீமான், எஸ்ஜே சூரியா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். 2011-ல் யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வாலி, உதயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார். தற்போது வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார்.
இந்நிலையில் அண்மையில் டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இறப்பு ரசிகர்களுக்கு தற்பொழுது வரை பேரதிர்ச்சியாவே உள்ளது.
இது ஒரு புறம் இருக்க தற்பொழுது மாரிமுத்து எதிர் நீச்சல் சூட்டிங்கின் போது கடைசியான பன்னை டீயில் முக்கி சாப்பிட்டுள்ளார்.அத்தோடு இந்த உணவு தான் தனக்கு மிகவும் பிடித்த உணவு என்றும் தெரிவித்துள்ளார். உதவி இயக்குநராக இருந்த காலத்தில் அதிகம் இந்த உணவினைத் தான் சாப்பிட்டதாகவும். தற்பொழுது இதுவே தன்னுடைய விருப்பத்திற்குரிய உணவாக மாறிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!