இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘விடுதலை பாகம் 1’ வரும் மார்ச் 31-ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளிவர உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் எதிர்பார்ப்பை எகிற செய்தது என்றே கூறலாம்.
இப்படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர், இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவானதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், விடுதலை முதல் பாகம் வரும் 31-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்பதற்கான தகவல் கிடைத்துள்து. அதன்படி, விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தையும் இந்த ஆண்டே படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
ஏனென்றால், முதல் பாகம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடும். எனவே, இரண்டாவது பாகத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்க வேண்டாம் என்பதற்காக விரைவில் விடுதலை 2 படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
Listen News!