• Sep 20 2024

அஜித்தின் புதிய திரைப்பட நியூ அப்டேட்... விடாமுயற்சி எப்போது வெளியாகிறது தெரியுமா...

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்தின் அடுத்த படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.


இப்படத்தில் அஜித்துடன் திரிஷா மற்றும் அர்ஜுன் மங்காத்தா படத்திற்கு பின் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் மற்றும் ஆரவ் உள்ளிட்டோர் முதல் முறையாக அஜித்துக்கு இணைந்துள்ளனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ஆக்ஷன் கதைக்களத்தில் அட்டகாசமாக உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் முடிவுக்கு வருவதாக தெரியவந்துள்ளது.


இதன்பின் கிட்டத்தட்ட 6 முதல் 8 மாதங்கள் வரை போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடக்கும் என்றும்  2024  தல ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக விடாமுயற்சி திரைப்படம் வெளிவரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை கெளப்பட்ட ரசிகர்கள் சந்தோடத்தில் குதிக்கின்றனர்.  

Advertisement

Advertisement