• Sep 20 2024

முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீசன் 2- கிளைமாக்ஸ் எப்பிஷோட் எப்போது ஒளிபரப்பப்படவுள்ளது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு சூப்பராக 2019ம் வருடம் முதல் ஒளிபரப்பாகி வந்தது. இடையில் கொஞ்சம் கதையில் சொதப்ப ரசிகர்கள் சீரியலை நிறுத்துங்கள் என புலம்பி வந்தார்கள்.இந்த நிலையில் தான் ஒருவழியாக சீரியலை முடித்தார்கள், 

அந்த சீரியல் முடிவடைந்ததைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 ஆரம்பமானது. இதில் வினுஜா தேவி மற்றும் சிப்பு சூர்யன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.மேலும் ரூபாஸ்ரீ, தீபா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 


சீரியலின் கதைப்படி பாரதி கண்ணம்மாவைத் திருமணம் செய்து விட்டார். முதலில் வீட்டிற்குள் சேர்க்க மறுத்த சௌந்தர்யா பின்னர் கண்ணம்மாவை வீட்டுக்குள் சேர்த்து விட்டார். 

மேலும் போகப்போக சீரியல் பழைய கதை போல இருக்கு என்று ரசிகர்கள் புலம்பி வருவதோடு சீரியல் ரிஆர்பியிலும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி இந்த சீரியலின் இறுதி எப்பிஷோட் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை 3மணியிலிருந்து 6.30 வரை ஒளிபரப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





Advertisement

Advertisement