• Sep 20 2024

விரைவில் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் திருமணம் எப்போது தெரியுமா? மணப்பெண் பெண் யார் தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

கே. எல். ராகுல் என அழைக்கப்படும் கன்னூர் லோகேசு ராகுல் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். மேலும் இவர் கருநாடக துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 


அதுமட்டுமல்லாமல் இவர் வலக்கைத் துடுப்பாட்டக் காரரான இவர் சிலவேளைகளில் குச்சக் காப்பாளராகவும் விளையாடுகிறார்.


அதுமட்டுமல்லாமல் இவர் 2013 ஆம் ஆண்டில் இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடினார். 


இந்நிலையில் பிரபல பாலிவுட் வில்லன் நடிகரின் மகளை காதலித்து வந்த கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், தற்போது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை நிதி அகர்வால் உடன் டேட்டிங் செய்து வந்தார். இதைவைத்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவின. பின்னர் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.


இதையடுத்து பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி உடன் நெருங்கி பழகி வந்தார் கே.எல்.ராகுல். அதியா ஷெட்டி. கே.எல்.ராகுல் உடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, அவருடன் ஜோடியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த அதியா ஷெட்டி, கடந்த ஆண்டு தங்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்தார்.


இந்நிலையில் அதியா ஷெட்டி - கே.எல்.ராகுல் ஜோடியின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறதாம்.

Advertisement

Advertisement