விஜய் நடித்துள்ள லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ஏற்கனவே இந்தக் கூட்டணியில் வெளியான மாஸ்டர், பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டானது. அதனால், லியோ திரைப்படம் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, இந்த வாரம் நடைபெறும் என சொல்லப்பட்டது. வரும் 30ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த லியோ இசை வெளியீட்டு விழா, திடீரென ரத்து செய்யப்பட்டது.
அதிகளவில் டிக்கெட் பாஸ்கள் கேட்டு விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடிகள் நடந்துவிடக் கூடாது என ரத்து செய்ததாக படக்குழு தெரிவித்திருந்தது.
தளபதியை நேரில் பார்க்க, அவரது குட்டி ஸ்டோரி கேட்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தார்கள், ஆனால் நிகழ்ச்சி ரத்து செய்தி அவர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.
இந்த நேரத்தில் லியோ படத்தின் ஒரு தகவல் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. அதாவது விஜய்யின் லியோ படத்தின் ட்ரெய்லர் அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக கூறுகின்றனர், ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்ககது.
Listen News!