தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம், பான் இந்தியா படமாக வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள லியோ படத்திற்கான ப்ரமோஷன்களை அதிகரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரி வருகின்றனர். லியோ படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோக்கள், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளதோடு அண்மையில் நடக்கவிருந்த இசைவெளியீட்டு விழாவும் நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக செக்கண்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.இந்நிலையில் அடுத்ததாக படத்தின் ட்ரெயிலர் குறித்தும் படக்குழுவினர் தற்போது அப்டேட் தெரிவித்துள்ளனர். வரும் அக்டோபர் 5ம் தேதி படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக தற்போது அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் அதிரடி போஸ்டருடன் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். மேலும் பனிபடர்ந்த பின்புலத்தில் காட்டு விலங்குடன் விஜய் மோதும் புகைப்படமும் இந்த பதிவில் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!