• Sep 20 2024

காத்துவாக்கில ரெண்டு காதல் திரைப்பட உரிமையைப் கைப்பற்றிய பிரபல டிவி-எப்போது ஒளிபரப்பப்படவுள்ளது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி- சமந்தா ஆகியோரின் கூட்டணியில் வெளியாகிய திரைப்படம் தான் “காத்துவாக்கில ரெண்டு காதல்”. இப்படத்தை விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக இப்படத்தை தயாரித்து இருந்தார்.

அத்தோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்ததோடு இந்தப்படம் ஏப்ரல் மாதம் 28ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க, கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க, ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடித்தார்.

மலையாளத்தில் இந்த படம் "கண்மணி ராம்போ கதீஜா" என்ற பெயரில் வெளியானது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் இந்த படம் மலையாளத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணிக்கு ஏசியா நெட் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement