• Sep 21 2024

'வெந்து தணிந்தது காடு' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?- அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்ததற்கு அமைய மாநாடு என்னும் படத்தின் மூலம் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளவர் தான் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அத்தோடு சிம்புவின் மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிம்பு தற்பொழுது 'வெந்து தணிந்தது காடு' பத்து தல ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி வருவதோடு வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் jயாரித்து வருகின்றார்.


 கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி மாலை 5 மணி முதல் சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. 


அத்தோடு ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் அரங்கேறவுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து ஒரு புது வீடியோவையும் பகிர்ந்துள்ளார்கள். 


Advertisement

Advertisement