தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் தமிழில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் இவருடன் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஷோலோ ஹீரோயினாகவும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் தற்பொழுது யசோதா என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்தப் படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை கிருஷ்ண பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார் . இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார்.
இதனால் இந்த படத்தின் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகும் என தற்போது படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வரும் மே 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்:
- பிரபல நிகழ்ச்சியில் நடிகர், தொகுப்பாளினி இடையே வெடித்த சண்டை-வைரல் வீடியோ..!
- பிரபல டிவி நடிகரை காதலிக்கும் ஏமி ஜாக்சன்? விரைவில் திருமணமா..!
- காதலியை ரகசியமாக பதிவு திருமணம் செய்த லோகேஷ் கனகராஜ்? கசிந்த வீடியோ..!
- காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகை தானாம்-விக்னேஷ் சிவன்
- “நானே வருவேன்” திரைப்படத்தில் இத்தனை பாடல்கள் இருக்கின்றதா?- முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!